புதன், 25 ஏப்ரல், 2012

எங்க அம்மா ஏன் தனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் மரம் நட சொன்னார்கள் என்ப்தும், மழை நீர் சேகரிக்க திட்டம் கொண்டுவந்தார்கள் என்பதும் அறிவுஜீவிகள் என்று தங்களை தாங்களே முடிசூட்டிக் கொள்பவர்கள் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி...தினமணிக்கு நெஞ்சிலிருந்து நன்றி!

கண்ணிருந்தும் குருடராய்...

மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. முதலாவதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடஸ்ராஜ் சிவன் ஆலயத்தில் உள்ள நச்சுப்பொய்கை வற்றுகிறது என்பது. இரண்டாவது, உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலின் பாரிஜாத மரம் பட்டுவிட்டது என்பது.
நீர் அருந்த நச்சுப்பொய்கைக்குச் சென்ற பாண்டவர் சகோதரர்கள், அதைப் பாதுகாத்து நின்ற பூதத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மயக்கமுற, தருமர் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து மீட்டு வந்ததாக மகாபாரதத்தில் ஒரு கட்டம் வரும். "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் பல உள்ளார்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துவதாக அமையும். கோன் பனேகா குரோர்பதி, டீலா நோ டீலா, கோடீஸ்வரர் ஆகலாம் போன்ற இன்றைய வெற்றிபெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி இந்த வினா-விடை போட்டி.
அதேபோன்று பாஞ்சாலி கேட்டதற்காக பாரிஜாத மலரை வீமன் தேடிக் கொண்டு வந்ததாக மகாபாரதம் சொல்கின்றது. தாய் குந்தியின் வழிபாட்டுக்காக பாரிஜாத மரத்தையே அர்ஜுனன் கொண்டுவந்ததாகவும், அதனைக் குந்தி இங்குள்ள சிவன் கோயிலுக்கு அளித்துவிட்டதாகவும் மரபுவழியிலான மகாபாரத கிளைக் கதைகள் சொல்கின்றன. கிராமத்தின் பெயரே (கிந்தூர்) குந்தி என்பதன் திரிபுதான் என்கிறார்கள்.
இந்தியாவில் பிற இடங்களில் மிக அரிதாக பாரிஜாத மரங்கள் இருந்தாலும்கூட, கிந்தூரில் உள்ள பாரிஜாத மரம் பல வகையிலும் மாறுபட்டது. பூக்கள் பூக்கும் தருணம் அந்தச் சூழலே ரம்யமாக மாறிவிடுமாம். மணம் பரப்பும் வெண்மையான மலர்கள் உதிரும்போது பொன்நிறமாக மாறிவிடும் என்கிறார்கள்.
இதன் பூக்கள் காயாகி விதையாவதில்லை. இதன் கிளைகளைக் கொண்டு பதியம் போட்டு மரம் வளர்க்கலாம் என்றால் அதுவும் நடைபெறவில்லை. ஏனென்றால், பாரிஜாத மரத்தில் இது ஆண் வகை. உலகத்திலேயே இந்தவகைப் பாரிஜாத மரம் ஒன்றுதான் இருக்கிறது என்கிறார்கள் தாவரவியல் வல்லநுர்கள்.
ஃபைசாபாத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்கள் குழு இந்தப் பாரிஜாத மரத்தை அண்மையில் ஆய்வு செய்து, பட்டுவரும் இந்த பாரிஜாத மரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் இதற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மரத்தை ஏதாவது செய்து கொன்றுவிடுவார்களோ என்கின்ற அச்சம்தான் காரணம். சுமார் 1000 ஆண்டுகள் முதல் சுமார் 4000 ஆண்டுகள் வரை இதன் வயது இருக்கலாம் என்கிறார்கள். இந்த அரிய மரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
பாரத மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம்தான் கோயில்களில் உள்ள மரங்கள். இந்திய மண்ணில்தான் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சமும், தீர்த்தமும் (குளம்) உண்டு. எந்த தட்பவெப்பத்தில், எத்தகைய மண்வளத்தில் கடல்மட்டத்திலிருந்து எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், அதன் மருத்துவக் குணங்களையும் தெரிந்துதான் கோயில்களில் ஸ்தல விருட்சங்களை வைத்துள்ளனர் நமது மூதாதையர். மா, பலா, புன்னை, மகிழம், மருதம், வன்னி, பன்னீர், பத்திரி, அரசு, வேம்பு என பல்வேறு மரங்களை ஸ்தல விருட்சமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் அந்த வகை மரங்களிலேயே மிகவும் தனித்துவமானவை. இந்த மாமரம் போனால் இன்னொரு மாமரம் என்பதைப் போன்றதல்ல. அதைத்தான் கிந்தூர் பாரிஜாத மரம் நமக்கு உணர்த்துகின்றது. அவை மிக அரிதான மரங்கள். ஆகையால்தான் இந்த மரங்களுக்கு அதீத மருத்துவக் குணங்கள் இருந்தன.
தீர்த்தம் (குளம்) என்பதும், அந்தக் கோயில் அமைந்துள்ள மண்ணின் கனிமத் தன்மையால் குளத்து நீர் வேதியியல் மாற்றம் பெற்று மருத்துவக் குணம் பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோயில் குளத்துக்கும் ஒரு விசேஷம். ஆகவேதான், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கோயில் குளத்தின் நீரைப் பரிந்துரைத்தார்கள்.
இன்று எல்லா கோயில்குளங்களும் வற்றிக் கிடக்கின்றன. திருநள்ளாறு, கும்பகோணம் மகாமகம் குளங்களில் விழாக் காலங்களில் லாரிகளில் நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறார்கள். பல்லாயிரம் பேர் குளிப்பதால், சுகாதாரம் கருதி குளோரினைக் கொட்டுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைத்துவிடும்? ஆன்மிகப் பலனும் இல்லை. அறிவியல் உண்மையும் இல்லை.
சமயத்துடன் இணைந்து இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக மரங்களை ஸ்தல விருட்சங்களாக்கிய நமது மூதாதையரின் தொலைநோக்குப் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்தல விருட்சங்களுக்குப் புனிதத் தன்மை தரப்படுவதால் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கோயில் தோறும் குளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்பதும் விஞ்ஞானம் வளராத காலத்து மூதாதையருக்கு இருந்தது. படித்துப் பட்டம் பெற்றதாலேயே புத்திசாலிகளாகி விட்டதாகக் கருதும் நம்மால் அவர்கள் வைத்துவிட்டுப் போனதைக் காப்பாற்றக்கூட முடியவில்லை.
இருப்பதையும் இழந்துவிடாமல் இருக்க வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், நமது தமிழகத்திலாவது...
நன்றி: தினமணி 26.04.12

சனி, 24 மார்ச், 2012

மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லாத கடன்: ஜெயலலிதா


பேசாத மனிதரின் சார்பிலும்

பேசுகின்ற தெய்வம்!-காது

கேளாத மனிதரின் துயரையும்

கேட்கின்ற இதயம்!


நடக்க இயலா மனிதருக்காகவும்

நடைபோடுகின்ற அரசு! - இந்த

நானிலத்தில் நமதன்னைக்கு

நிகரில்லையென கொட்டு முரசு!

வியாழன், 23 பிப்ரவரி, 2012

பிள்ளைகள் தான் பிறக்கிறார்கள்- அம்மா அவதரிக்கிறாள் ! (24.02.12)



கோடிக் கண்களில்

கொஞ்சும் கருணையும்

நாடி வருபவர்

நலம்பெற அருளையும்


வாரி வழங்கிடும்

வள்ளலின் வழியே!

மாரி நிரந்தரி!

பனித்ததென் விழியே!


பாடித் துதிப்பவர்

பாவளர் கருவே!

பழகு செந்தமிழின்

அழகிய உருவே!


மோகம் அறுத்திடும்

முனிகளின் தவமே!

தாகம் தணித்திடும்

தமிழர்தம் வரமே!


அறுசுவையாவிலும் நறுசுவையாவது

அன்னையின் மொழி சுவையே!என

தன்னையின் மொழி சுவையே!


நிலமகள் உளமகிழ் நீணிலம் யாவிலும்

அன்னையின் கொடி பறக்கும்! என

தன்னையின் கொடி பறக்கும்!


வடமுதல் தென்வரை இருஇலை துளிர்விட

விதையினை தாய் விதைப்பாள்!அதில்

வேறெனவும் இருப்பாள்! வெற்றிச்

சுடரெனவும் உதிப்பாள்!

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும்; 40 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்: ஜெயலலிதா

பெற்ற தாயினும் பெரிய தாயே..! உனை வணங்கிட கற்ற தமிழிலும்

வார்த்தைகள் தேடி களைத்து போகிறேன்..!முன்னை வினைப்பயன்

முற்றுப்பெற்றிட முதல்வராகினாய்! ம்ற்று யாது நான் கூறிட தாயே

மனமுருகினேன்! பக்தியுடன் அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு
ஆட்டம் காட்டிய அரசியல் புயலுக்கெல்லாம் தண்ணி காட்டிய தங்கத்தாரகை எங்க அம்மா...இந்த தானே புயல் போலே இனி எந்த மகா புயல் வந்தாலும் அதை சமாளிக்கத் தான் காங்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டம்.ஒருவகையில் தானே புயல் கூட என் தாயின் ஆட்சியில் அடித்ததால் தான் கடலூர் மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கிடைத்தன,போன ஆட்சியில் புயல் வந்திருந்தால் தானே புயல் பேரைச் சொல்லி தாத்தாவின் மெகா குடும்பத்தில் யாராவது ஒருவர் குபேரனாயிருப்பார்...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புரட்சித் தலைவர் பிறந்த நாள்! 17.01.2012


நடிப்பு துறையிலிருந்து நாடாள வந்தாய்

நாடாளும் போது நடிக்க மறந்தாய்!


வேற்று மாநிலம் நீயென புளுகிடும்

வெற்று கோஷங்களை நின்

வேலைத்திறத்தால் வேரோடு சிதைத்தாய்!


தன் மக்கள் நலம் நாடும்

தருக்கர்களின் பிடிவிலக்கி

தமிழ் மக்கள் நலம் பெறவே

தரும யுத்தம் செய்தாய்!


மக்கள் செல்வாக்கை சந்தை பொருளாக

மலிவாய் வாங்கிடவே மனக்கோட்டை கட்டியோரின்

குணக்கேட்டை அழித்தாய்..! இனம்

கொன்றாரை வென்றாய்!


என் தலைவா....!

எங்கே நீ இறந்தாய்...?

இதோ...

மறுபடியும் படித்தாலும் புரிந்திடுமே...நின்

மறுபிறவி அம்மாவின் வடிவில்

அருளாட்சி செய்வது உலகம் அறிந்திடுமே..!


புதன், 11 ஜனவரி, 2012

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்


t


தாய் சொல்லை மீறிய

நட்சத்திர குழந்தையொன்று

வான விளிம்பிற்கு வந்து

வழுக்கி விழுந்தது பூமியில்..


காணாமல் தாய்முகத்தை

கலங்கி அழுதது...கண்ணீர் விட்டது..

எப்படி சேர்வேன் என் தாயை மீண்டுமென

ஏங்கி பரிதவித்து ஏமாந்து நின்றது..


குழந்தைகள் கூட்டமொன்று-குட்டிமீன்

கூக்குரலை கேட்டுநொந்து

பட்டம் செய்ததிலே படுக்கவைத்து விண்துளியை

பரிவுடனே அனுப்பிவைத்தார் தாயிடத்தில்


சிறுகுழந்தை பட்டமெல்லாம்

சேர்ந்த்திடுமா விண்வெளியை..?

சோர்ந்து களைத்தவர்கள்

சேர்ந்தனர் தம் ஆசனிடம்

சொல்லியழுதனர் தாய்பிரிந்த

சுடர்குழந்தை சோகத்தினை...


ஆசிரியர் நேசமுடன் அரவணைத்து பாசமுடன் கேட்டார்

`எத்தனை மைல் தூரமுந்தன் தாயின் இருப்பிடம்?

எப்படிதான் இருக்குமுந்தன் தாயின் திருமுகம்?


பாவம் பட்டுத்துணுக்கு போலே

பளீரிட்ட வான் குழந்தை

ஏதுமறியாது பரிதவித்து நின்றது

எதுவும் தெரியாது நான் சிறுகுழந்தையென்றது


ஓடிச்செல்லுங்கள் அறிவியலார்

ஒருவரிடம் என்றார் ஆசிரியர்

விஞ்ஞானி குழந்தையின் விம்மல் தாங்காமல்

விண்கலம் செய்ததிலே விண்ணுக்கு அனுப்பி வைத்தார்


பாவம் அந்த கலனும்

பாதியிலே திரும்பி வர

அழுதபடி அதனுள்ளே

அபலையாய் அக்குழந்தை...


என் செய்ய...?


வலியவிதி வழிநடத்த

வழிதவறி வந்த பிள்ளை

தனித்து தவித்திருக்க

இருண்டது வானவெளி...


இறைத்த பொறி போலே..

எங்கும் நட்சத்திரம்...

எது எனது தாயின் முகம்...?

எது எனது தாயின் கரம்...?


பக்கத்து வீடொன்றின்

படிதாண்டி ஒருகுழந்தை

தவழ்ந்து வந்திந்த

தளிர்மீனின் அருகமர்ந்து தடவிகொடுத்தது


அம்மாவை அடைவதற்கா வழி வேண்டும்

அடப்பாவி..இப்போது பாரென்று

கைதூக்கி கண்மூடி

முகம் சுளித்து முழுக்குரலில்

`அம்மா`வென அலறியது...


ஒரு நொடியில் உள்ளிருந்து

ஓடோடி வந்த தாயோ..

நட்சத்திரம் பூமியிலே ஒளிர்வதையும் பாராது

தன் குழந்தை முகம்துடைத்து தழுவியபடி உள்சென்றாள்


நட்சத்திர குழந்தைக்கும் நம்பிக்கை மின்னியது..!


கைதூக்கி முகம் வாடி

கண்மூடி வான் நோக்கி

`அம்மா`வென ஓலமிட்டு

அழைத்த நொடி வானின்று

வழிந்து இறங்கியது ஒளிக்கீற்று..!

வாரி அணைத்து வருடியபடி சென்றாள் நட்சத்திர தாய்..!


எளியோரின் நலம் பேண

இளைத்தோரின் துயர் களைய

வலியோரின் வார்த்தைகளோ

வண்ணமிகு வருணணையோ

உதவாது ஒரு போதும்...


முகம் வாடி கைதூக்கி நோய்நீக்க

முழு மனதாய் நம்பிக்கையுடன்...

`அம்மா`வென அழுது அழைத்தோருக்கு

என் தாயே..! தங்கத் தாரகையே..! நீ

ஒரு நொடியில் ஓடிவந்து துயர் களைந்தாய்!

ஒப்பற்ற திட்டம் தந்தாய்..!


வாழி நின் புகழ்! வையம் உள்ளவரை...!


பக்தியுடன்

அம்மா என் தெய்வம்

வல்லம் தமிழ்