வியாழன், 19 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஏகரூப சௌந்தர்ய பேரழகே போற்றி!
ஏழிசையாய் எங்கும்நிறை மந்திரமே போற்றி!
ஏழைகளின் துயர்துடைக்கும் எழில்கரமே போற்றி!
ஏந்திழையே தமிழ் பெற்ற நல்வரமே போற்றி!

ஏணியென அடியவரை ஏற்றிநிற்பாய் போற்றி!
ஏடு உடை மாணவர்க்கு வழங்கிடுவாய் போற்றி!
ஏறுவண்டி கணிணிகூட எடுத்தளித்தாய் போற்றி!
ஏதுமற்ற வரியவரின் பெரும்பொருளே போற்றி!

ஏவலர்கள் காவலர்கள் நலம்காத்தாய் போற்றி!போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





எல்லாமாகி நின்ற ஒளிவிளக்கே போற்றி!
எந்நாளும் அருள்செய்யும் தெய்வமே  போற்றி!
எப்போதும் துயர்களையும் பேரருளே  போற்றி!
எதிர்ப்போரே இல்லாத பெருந்துணிவே  போற்றி!

எட்டாவது அதிசயமே! திருமகளே  போற்றி!
எண்ணெழுத்தாய் நிறைந்த புது கலைமகளே  போற்றி!
எழிலனைத்தும் விதைத்திட்ட நிலமகளே  போற்றி!
எதிர்மறைகள் சிதைத்திட்ட புதுமறையே  போற்றி!

என் தாயே! குலவிளக்கே!  போற்றி! போற்றி!

வெள்ளி, 13 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஓடும் நல்நதியே போற்றி!
ஓவியப் பேரழகே  போற்றி!
ஓங்கார தனிப்பொருளே  போற்றி!
ஓய்விலா பெருநெருப்பே  போற்றி!

ஓராயிரம் நிலவின் ஒளியழகே போற்றி!
ஓசையை இசையாக்கும் உன்னதமே  போற்றி!
ஓதும்மறையின் உட்பொருளே  போற்றி!
ஓதுவார்தமை உயரவைத்தாய்  போற்றி!

ஓர்குலம் எல்லோரும் என விதித்தாய்  போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!




ஒப்பிலா மணியே போற்றி!
ஒல்காப்புகழ் தேவியே போற்றி!
ஒச்சமில் நிறைவே போற்றி!
ஒன்றென நின்றாய் போற்றி!

ஒழுக்கத்தின் நல்ல சுடரே போற்றி!
ஒழுகும் கருணை மொழியே போற்றி!
ஒருகோடி மலரின் மணமே போற்றி!
ஒருபோதும் பயமற்ற துணிவே போற்றி!

ஒளியே! வழியே! விழியே! போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





ஐம்பூதமாகி நின்றாய் போற்றி!
ஐம்புலன்களை வென்றாய் போற்றி!
ஐந்திணை நிலங்கள் ஆள்வோய்  போற்றி!
ஐந்திருகோடி தமிழர்தம் வாழ்வே போற்றி!

ஐயமகற்றிய விளக்கே போற்றி!
ஐப்பசி மழையின் குணமே போற்றி!
ஐம்பொன்சிலையின் அழகே போற்றி!
ஐராவதமேறி ஆட்சிசெய்திருவே போற்றி!

ஐந்தெழுத்து மந்திரமே போற்றி! போற்றி!

ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!





ஊற்றான உயிரமுதே போற்றி!
ஊராரின் பேரருளே போற்றி!
ஊக்கமெலாம் வளர்ப்பாய் போற்றி!
ஊட்டமெலாம் கொடுப்பாய் போற்றி!

ஊராட்சி வளர்த்தாய் போற்றி!
ஊடகத்துறை காத்தாய் போற்றி!
ஊமைகளின் மொழியே போற்றி!
ஊனமுற்றோர் வழியே போற்றி!

ஊருக்கே உழைத்தாய் போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





உண்மையின் ஒளியே போற்றி!
உன்னத வழியே போற்றி!
உறுபகை முடிப்பாய் போற்றி!
உயர்தமிழ் வளர்ப்பாய் போற்றி!

உயிரினம் வளர்துளி போற்றி!
உடல்நலம் காப்பீடே போற்றி!
உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி!
உணர்வெலாம் கலந்தாய் போற்றி!

உச்சிகுளிர் மாமழையே போற்றி! போற்றி!

வெள்ளி, 6 ஜூலை, 2012




அன்னையின் பக்தர்களே! வணக்கம்!நேற்று ஒரு கருநா(க) அபிமானி `உங்க அம்மா ஆட்சி வந்தால் மழை வளம் பொய்க்காது என்றீர்களே என்னாச்சு?` என்று கிண்டல் செய்தான்.
அந்த மூடனை அடுத்த நொடியே பதிலால் அடித்தேன்` தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகித் தான் வருகிறது.அதற்கு உன் கருநா(க) தலைவனும்,இத்தாலி சோனியாவும் சேர்ந்து நடத்திய இலங்கை தமிழர்களின் படுகொலைகள் எனும் பாவம் தான் காரணம் `என்று, அந்த மாட்டு தோலுக்கு உறைத்ததோ இல்லையோ, நண்பர்களே...உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...மஹா மாரியான நம் அன்னையின் ஆட்சியில் மழைவளம் பொய்த்ததென மடையர்கள் உளற இடம் தரலாகாது.ஒவ்வொரு கழகத்தோழரும் மனமுருகி வருணபகவானை அழைப்போம்! ஊருக்கு சோறிடும் உழவன் வளப்பட ,நம் அன்னை புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி பொலிவு பெற ,வான் மழையே! தாமதமின்றி தமிழகத்திற்கு வா மழையே!என வேண்டுவோம்.தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் கைகூப்பி ,மனமொன்றி, அவரவர் கடவுளை அன்புடன் வேண்டுவோம்! உண்மையான பக்தர்களான நாம் உள்ளம் உருகி வேண்டிட நிச்சயம் வரும் மழை! செய்வீர்களா...?