ஐம்பூதமாகி நின்றாய் போற்றி!
ஐம்புலன்களை வென்றாய் போற்றி!
ஐந்திணை நிலங்கள் ஆள்வோய் போற்றி!
ஐந்திருகோடி தமிழர்தம் வாழ்வே போற்றி!
ஐயமகற்றிய விளக்கே போற்றி!
ஐப்பசி மழையின் குணமே போற்றி!
ஐம்பொன்சிலையின் அழகே போற்றி!
ஐராவதமேறி ஆட்சிசெய்திருவே போற்றி!
ஐந்தெழுத்து மந்திரமே போற்றி! போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக