அன்னையின் பக்தர்களே!
வணக்கம்!நேற்று ஒரு கருநா(க) அபிமானி `உங்க அம்மா ஆட்சி வந்தால் மழை வளம் பொய்க்காது
என்றீர்களே என்னாச்சு?` என்று கிண்டல் செய்தான்.
அந்த மூடனை அடுத்த
நொடியே பதிலால் அடித்தேன்` தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே இந்த ஆண்டு
பருவ மழை தாமதமாகித் தான் வருகிறது.அதற்கு உன் கருநா(க) தலைவனும்,இத்தாலி
சோனியாவும் சேர்ந்து நடத்திய இலங்கை தமிழர்களின் படுகொலைகள் எனும் பாவம் தான்
காரணம் `என்று,
அந்த மாட்டு தோலுக்கு உறைத்ததோ இல்லையோ, நண்பர்களே...உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...மஹா
மாரியான நம் அன்னையின் ஆட்சியில் மழைவளம் பொய்த்ததென மடையர்கள் உளற இடம்
தரலாகாது.ஒவ்வொரு கழகத்தோழரும் மனமுருகி வருணபகவானை அழைப்போம்! ஊருக்கு சோறிடும்
உழவன் வளப்பட ,நம் அன்னை புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி பொலிவு பெற ,வான்
மழையே! தாமதமின்றி தமிழகத்திற்கு வா மழையே!என வேண்டுவோம்.தினமும் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் கைகூப்பி ,மனமொன்றி, அவரவர் கடவுளை அன்புடன்
வேண்டுவோம்! உண்மையான பக்தர்களான நாம் உள்ளம் உருகி வேண்டிட நிச்சயம் வரும் மழை!
செய்வீர்களா...?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக