
நடிப்பு துறையிலிருந்து நாடாள வந்தாய்
நாடாளும் போது நடிக்க மறந்தாய்!
வேற்று மாநிலம் நீயென புளுகிடும்
வெற்று கோஷங்களை நின்
வேலைத்திறத்தால் வேரோடு சிதைத்தாய்!
தன் மக்கள் நலம் நாடும்
தருக்கர்களின் பிடிவிலக்கி
தமிழ் மக்கள் நலம் பெறவே
தரும யுத்தம் செய்தாய்!
மக்கள் செல்வாக்கை சந்தை பொருளாக
மலிவாய் வாங்கிடவே மனக்கோட்டை கட்டியோரின்
குணக்கேட்டை அழித்தாய்..! இனம்
கொன்றாரை வென்றாய்!
என் தலைவா....!
எங்கே நீ இறந்தாய்...?
இதோ...
மறுபடியும் படித்தாலும் புரிந்திடுமே...நின்
மறுபிறவி அம்மாவின் வடிவில்
அருளாட்சி செய்வது உலகம் அறிந்திடுமே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக