செவ்வாய், 26 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஈழத்தை காத்தாய் போற்றி!
ஈடுஇணை அற்றாய் போற்றி!
ஈட்டிமுனை அறிவோய் போற்றி!
ஈனப்பதர்களை வென்றாய் போற்றி!

ஈழவர்துயர் துடைத்தாய் போற்றி!
ஈகைக்குணம் படைத்தாய் போற்றி!
ஈரமனம் கொண்டாய் போற்றி!
ஈதலினால் உயர்ந்தாய் போற்றி!

ஈன்றவளே என் தாயே! போற்றி!போற்றி!

திங்கள், 25 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



இல்லாமை ஒழித்தாய் போற்றி!
இலவசங்கள் அளித்தாய்  போற்றி!
இரட்டை இலை வளர்த்தாய்  போற்றி!
இதயதெய்வமென சிறந்தாய் போற்றி!

இனமானம் காத்தாய்  போற்றி!
இந்தியாவின் மறத்தாய் போற்றி!
இளைஞர்களின் நீதியே  போற்றி!
இருளகற்றிய ஜோதியே  போற்றி!

இனிய தமிழ் பூமகளே போற்றி!

சனி, 23 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஆற்றலின் தோற்றமே போற்றி!
ஆற்றிடும் தேற்றமே போற்றி!
ஆநிரை அளித்தாய் போற்றி!
ஆனந்தம் நிறைத்தாய் போற்றி!

ஆதங்கம் தவிர்த்தாய் போற்றி!
ஆபத்தில் காப்பாய் போற்றி!
ஆதிக்கம் ஒழித்தாய் போற்றி!
ஆதித்தன் சுடரே போற்றி!

ஆட்சியில் சிறந்தாய் போற்றி!

சனி, 16 ஜூன், 2012


நடந்தாய்  வாழி காவேரி...! 


வேறிடம் கருவாகி தமிழ்நிலம்
விளங்கிட நடந்தாய் வாழி!
நடந்திடும் வழியெலாம் பொன்னாக
வளம்வாரி பொழிந்தாய் வாழி!


பூமியில் பசுந்தளிர் வேரெலாம்
நீராய் நிறைந்தாய் வாழி!
புதுப்புனல் செழுங்கனல் அனைத்துளும்
புகுந்துயிர் கொடுத்தாய் வாழி!



துளித்துளி உயிராய் அணுக்களில் ஓடி
துடித்திடும் துடிப்பாய் விரிந்தாய் வாழி!
பனித்துளி நீராய் பவித்திரமானாய்
மணிச்சுடர் தெறிப்பாய் நிறைந்தாய் வாழி!


உலகெலாம் சாதனை விதைத்தாய் வாழி!
உயிரெலாம் வேதனை குறைத்தாய் வாழி!
பகையெனும் தருக்கரை சிதைத்தாய் வாழி!
பணிந்திடும் தொண்டரை நிறைத்தாய் வாழி!