செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இதயக்கனியின் இதயத்துடிப்பு..!


கல்லறையின் மீதும் காதுவைத்து

புரட்சித்தலைவரின்

கடிகார துடிப்பு தேடும்

கண்மணிகளே...!

கண்திறந்து கவனித்துப் பாருங்கள்...

அம்மாவின் ஆட்சியெனும் வடிவில்

இப்போது அவரது

இதயத்துடிப்பே

உணரக்கிடைக்கும் உங்களுக்கு...!


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மகா மாரி...!


தேன் கூடு திரண்டது போல்

நிறங்கொண்ட வானம் நேற்று

வழிந்தது மதுத்துளியாய்

வழியெங்கும் வெள்ளக்காடு

மழையாய் பொழிந்து இந்த

மண்ணை வளப்படுத்துபவளை

நாங்கள் மாரி என்போம்...!- அந்த

மழை நீர் சேகரிக்க திட்டம் தீட்டி-எங்கள்

மனதெல்லாம் குளிர வைத்தாய் உன்னை

மகா மாரி என்போம்...!


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நல் சுடரே...!

நேற்றொன்று சொல்லி பின்பு

இன்றொன்று மாற்றி இனிமேல்

நாளையென் சொல்வோம் எனவே

நாடகம் பிதற்றும் பொய்யர்


நடுவினில் உதித்த நல்சுடரே வாழி!

எடுத்த நல்முடிவினில் என்றும்

நழுவாத மனத்துணிவு! வார்த்தை

பிறழாத அறச்செறிவு !

தூய்மையே வாய்மையாய் கொண்டாய்

துயரில்லை இனி உனக்கு!