
அரசு ஊழியர்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ இணைய முடியாத பெரும்பகை இருப்பதைப்போல் படம் காண்பித்து அந்த மாயத்தோற்றத்தை நம்பி ஏமாந்த அப்பாவி அரசு ஊழியர்களை தங்களது வழ்க்கமான அடுக்குமொழி ஏமாற்று வித்தையால் மயக்கி தங்களது ஓட்டு வங்கியாக வைத்திருந்த வஞ்சகர்களின் சூழ்ச்சியை இப்போதாவது அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அம்மா அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகளை வரிசையாக என்னால் பட்டியலிட முடியும்
1 . உச்ச நீதி மன்றமே வேலைநிறுத்தம் செய்வது சட்ட விரோதம் தான் என கைவிரித்த பிறகும் எங்க அம்மா தனது தணியாத கருணை கரம் விரித்து ஆதரித்ததால் தான் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அன்று பணியில் சேர முடிந்ததே தவிர இவர்கள் ஏமாற்றுவது போல் வழக்கு போட்டு ஜெயித்ததால் இல்லை.இதை விட பெரிய கொடுமை வேலை நிறுத்த தடை சட்டத்தை நீக்குவோம் என சத்தியம் செய்து அரசு ஊழியர்களை தங்களது வாக்கு வங்கியாக இன்னும் கூடுதலாக தங்கள் கட்சி அடிப்படை தொண்டன் போல் வேலை வாங்கி கொண்ட கட்சிகள் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்து பல வருடங்கள் ஆன பின்னும் ஏன் இன்னும் அரசு ஊழியர் வேலைநிறுத்த தடைசட்டத்தை திரும்ப பெற வில்லை??.
2 இன்று மத்திய அரசு ஊழியருக்கு இணையாக சம்பளம் பெறும் அரசு ஊழியர் ஒவ்வொருவரும் நன்றியோடு என் தெய்வம் அம்மாவை நினைத்து பார்க்க வேண்டும்.ஏனெனில் இன்று நீங்கள் வாங்கும் சம்பளம் தனது ஆட்சி காலத்தில் எங்க அம்மா இட்ட(நீங்கள் பலர் தூண்டிவிட்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகும்) அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் அரசு ஆணையின் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 .மனதை தொட்டு சொல்லுங்கள் அரசு வேலையில் அரசியல் குறுக்கீடு என்பது அம்மா ஆட்சியில் நடக்க முடியுமா?சாதாரண வட்டக்கிளை செயலரிடம் பல அதிகாரிகள் கை கட்டி நின்றதை நாம் போன ஆட்சியில் பல முறை பார்த்திருக்கலாம் ,இன்று ஏதேனும் ஒரு அமைச்சர் அப்படி மிரட்டிவிட்டு பதவியில் தொடர முடியுமா? சுத்தமான ,அச்சமற்ற சூழலில் நீங்கள் பணியாற்றுவதை எங்க அம்மாவை தவிர யாரால் உத்திரவாதபடுத்த இயலும்? அப்படி பயமற்று சுதந்திரமாக பணிபுரிவதை விட சில ஆயிரம் ரூபாய் சலுகைகள் பெரிதென்றா நினக்கிறீர்கள்..? இனியாவது கருணையும் ,கண்டிப்பும் இரு கண்களாக கொண்டு அருளாட்சி நடத்தும் என் தெய்வத்தின் அரசாட்சிக்கு துணை நின்று வரலாற்று சாதனைகள் நிகழப்போகும் இந்த காலகட்டத்தின் ஒருசாட்சியாக மாறுங்கள்...மிகுந்த நன்றியுடன் அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக