நடந்தாய் வாழி காவேரி...!
வேறிடம் கருவாகி தமிழ்நிலம்
விளங்கிட நடந்தாய் வாழி!
நடந்திடும் வழியெலாம் பொன்னாக
வளம்வாரி பொழிந்தாய் வாழி!
பூமியில் பசுந்தளிர் வேரெலாம்
நீராய் நிறைந்தாய் வாழி!
புதுப்புனல் செழுங்கனல் அனைத்துளும்
புகுந்துயிர் கொடுத்தாய் வாழி!
துளித்துளி உயிராய் அணுக்களில் ஓடி
துடித்திடும் துடிப்பாய் விரிந்தாய் வாழி!
பனித்துளி நீராய் பவித்திரமானாய்
மணிச்சுடர் தெறிப்பாய் நிறைந்தாய் வாழி!
உலகெலாம் சாதனை விதைத்தாய் வாழி!
உயிரெலாம் வேதனை குறைத்தாய் வாழி!
பகையெனும் தருக்கரை சிதைத்தாய் வாழி!
பணிந்திடும் தொண்டரை நிறைத்தாய் வாழி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக