வியாழன், 6 அக்டோபர், 2011

முழு நிலவு...!

முழுநிலவின் ஒளியழகை

தெருவிளக்கா தெரியச்செய்யும்?

கலைநிலவே உனதெழிலை

அணிகலனா அறியச்செய்யும்..?

அணிந்ததனால் பொன்நகைகள்

அழகு பெற்றன அன்று...

பொறுக்காத குறுமதியார்

பொய்புரட்டை அவிழ்த்துவிட

புன்னகையே அணிகலனாய்

புனைந்திருந்தாய் வெகுகாலம்

அன்னையர்கள் மனமுருகி

அனுதினமும் கேட்டபின்பும்

தவம்போலே தவிர்த்திட்டாய்

தங்கநகை என் தாயே....

அம்மா உன் துறவு நிலை

சகியாத தொண்டர்களின் குரல்வலுத்து

உயிர்மறுத்து அணிவகுத்தார்

என் மக்கள் தொண்டர்களே

என்ற சொல்லை மெய்ப்பிக்க

தாலிக்கு தங்கம் தந்து

ஆணையிட்ட கையினால் தான்

அணிந்துகொண்டாய் பூத்தோடு...!

அம்மா...என் தெய்வமே...!

அரக்கர்கள் மொழிகேட்டு-அதை

களைவதை நிறுத்திவிடு இத்தோடு...!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக